தலைமை ஹாஜியை மாற்ற தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

தலைமை ஹாஜியை மாற்ற தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்
Updated on
1 min read

தலைமை ஹாஜியின் அறிவிப்பால், தமிழக அரசு மீது முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், தலைமை ஹாஜியை மாற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று அவர் அளித்த பேட்டி: நோன்பு பெருநாளை, பிறை பார்த்து தீர்மானிக்க வேண்டும் என்ற இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாறாக, வியாழக்கிழமை (இன்று) நோன்பு பெருநாள் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதையே, பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஜூலை 5-ம் தேதி மாலை கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்பதூரில் பிறை தென்பட்டதால், ஜூலை 6-ம் தேதி (நேற்று) தமிழக முஸ்லிம்கள் நோன்பு பெருநாளைக் கொண் டாடினர். மேலும் கேரளா, கர்நாடகா போன்ற இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நோன்பு பெருநாள் கொண்டாடப் பட்டது.

ஆனால், ஜூன் 7-ம் தேதி நோன்பு பெருநாள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்து இருப்பதால், பெருநாளைக் கொண்டாடிய முஸ்லிம்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தலைமை ஹாஜியின் தவறான அறிவிப்பால், ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தமிழக அரசின் மீது கொந்தளிப்பில் உள்ளனர். எனவே, தற்போதைய தலைமை ஹாஜி சலாவுதீன் அயூப்பை மாற்ற வேண்டும் என்பதை முஸ்லிம்களின் கோரிக்கையாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்தவரையே தமிழக ஹாஜியாக நியமிக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in