

தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சி.விஜயபாஸ்கர் இன்று பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில், சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சி.விஜயபாஸ்கருக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்றத் தலைவர் ப.தனபால், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் ராப்பூசல் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியின் மகனான விஜயபாஸ்கர், எம்.பி.பி.எஸ். முடித்தவர். இவர், கடந்த 2001-ல் முதல்முறையாக புதுக்கோட்டை தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டார். கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.