41 நாள் டெல்லியில் நடைபெற்றதை போல சென்னையில் விவசாயிகள் போராட்டம்: போலீஸ் அனுமதி மறுப்பு - கைது செய்ய முடிவு

41 நாள் டெல்லியில் நடைபெற்றதை போல சென்னையில் விவசாயிகள் போராட்டம்: போலீஸ் அனுமதி மறுப்பு - கைது செய்ய முடிவு
Updated on
1 min read

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே விவசாயிகள் கோரிக்கை களை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை தொடங்கியுள் ளனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 41 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். அதுபோன்ற போராட்டத்தை சென்னையில் நேற்று தொடங்கி யுள்ளனர்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயது முடிந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் வாங்கப்பட்ட கடனுக்காக நகைகளை வங்கிகள் ஏலம்விடும் நடவடிக்கையை அரசு தடுத்து நிறுத்த முன் வர வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை அரசு உடனே வழங்க வேண்டும். மீத்தேன் திட்டத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று காலை தொடர் போராட்டம் தொடங்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, உயிரிழந்த விவசாயி களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

டெல்லியில் நாங்கள் போராட்டம் நடத்தியபோது தமிழக முதல்வர் கே.பழனிசாமி எங்களை சந்தித்தார். விவசாயிகளின் கோரிக் கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார். ஆனால், அனுமதி பெற்றுத்தரவில்லை. விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மாட்டோம் என உறுதி அளித்தார். ஆனால், இப்போது தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகள் தொடர் பாக முதல்வர் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப் படவில்லை. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை அடிமை களாகவே பார்க்கிறது. எனவேதான் வேறுவழியின்றி இன்று (நேற்று) தொடர் போராட்டத்தை தொடங்கி யுள்ளோம். 32 மாவட்ட விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அடுத்த மாதம் 10-ம் தேதி வரை 32 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் அனுமதி மறுப்பு

‘எதிர்காலம் டிரஸ்ட்’ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி வாங்கியுள்ளனர். 32 நாட்கள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில் 2 நாட்களுக்கு மட்டுமே போலீ ஸார் அனுமதி அளித்து இருந்தனர். ஆனால், போலீஸாரின் விதிமுறை களை மீறி போராட்டக்காரர்கள் நடந்து கொண்டதால் 10-ம் தேதி (இன்று) போராட்டம் நடத்த போலீஸார் வழங்கிய அனுமதியை ரத்து செய்துவிட்டனர். இதனால் இன்று போராட்டம் நடத்தினால் அனைவரையும் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in