

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய பிப்ரவரி 28-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாக அரசு தேர்வுத் துறை அறிவித் துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
வரும் மார்ச் மாதம் நடைபெற வுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை ஜனவரி 25 முதல் 29 வரை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள லாம் என்று முன்பு அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள பிப்ரவரி 28-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.
அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் ‘ஹால்டிக் கெட் டவுன்லோடு’ என ஆங்கிலத் தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை கிளிக் செய்து விண்ணப்பம் எண் மற்றும் பிறந்த தேதியைக் பதிவுசெய்து ஹால்டிக்கெட்ட பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.