

திண்டிவனம் அருகே செண்டூரில் 2007-ம் ஆண்டு நடந்த வெடி விபத் தில் 16 பேர் உயிரிழந்த வழக்கில், 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண் டனை மற்றும் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த திண்டிவனம் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தர விட்டது.
கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி பாதிரியாபுலியூரில் இருந்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செண்டூர் கிராமம் வழியாக தேசிய நெடுஞ் சாலையை நெருங்கிய ஜீப் ஒன்று வெடித்துச் சிதறியது. அப்போது பேருந்துக்குக் காத்திருந்த மற்றும் சாலையோரம் குடியிருந்தவர்கள் என மொத்தம் 16 பேர் உயிரிழந் தனர். மேலும் 17 பேர் பலத்த காய மடைந்தனர். மேலும் அக்கிராமத் தில் இருந்த கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் என 185 வீடுகள், அரசின் 59 தொகுப்பு வீடுகள், ரூ.28.75 லட்சம் மதிப்புள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி கட்டிடங்கள் சேத மடைந்தன.
இவ்விபத்து தொடர்பாக புதுச் சேரி மாநிலம் மணலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர், வீடுர் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன், பாதிரியாபுலியூரைச் சேர்ந்த அண்ணாமலை, வெடி மருந்து ஏற்றிச் சென்ற ஜீப் டிரைவர் பாபு, தென் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த குமார், பலராமன் ஆகிய 6 பேர் மீது மயிலம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வெடி விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நியமித்தது.
விசாரணை முடிவில், மணலிப்பட்டு சேகர் என்கிற வெடிமருந்து விற்பனையாளர் வாணவேடிக்கை, குவாரி உள்ளிட்ட தேவைகளுக்காக வெடிபொருட்களைச் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று ஒரே ஜீப்பில் வெடி மருந்துகளுடன் அவற்றை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர்களையும் பாதுகாப் பின்றி ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கு திண்டிவனம் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 9 வருடங் களுக்கும் மேலாக நடந்து வந்தது. வழக்கில் 216 சாட்சிகள் விசாரிக் கப்பட்டனர். குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் விபத்தின்போதே இறந்து விட்டனர்.
நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். வழக்கில் தொடர் புடைய புதுச்சேரி, மணலிப்பட்டு கிராமத்தைச் சேகர், வீடுரைச் சேர்ந்த நாகப்பன், பாதிரியாபுலியூரைச் சேர்ந்த அண்ணாமலை ஆகியோ ருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் பொதுச் சொத்து களை சேதப்படுத்தியது, பொது மக்களைக் காயப்படுத்தியது உள் ளிட்ட 14 பிரிவுகளில் 3 பேருக்கும் 60 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்தார். மேலும் சேகருக்கு ரூ.30 ஆயிரம், நாகப்பன், அண்ணாமலைக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். குற்றவாளிகள் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.