

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசு ஒதுக்கிய தென்பெண்ணை வீட்டை 2 வாரத்துக்குள் காலி செய்ய வேண்டும் என தமிழக அரசு நோட்டீஸ் அளித்துள்ளது.
ஓபிஎஸ் முதல்வராக இருந்த போதும், அமைச்சராக இருந்த போதும் அவருக்கு ஆர்.ஏ.புரம் பசுமை வழிச்சாலையில் உள்ள தென் பெண்ணை இல்லத்தை அரசு ஒதுக்கி இருந்தது. அந்த இல்லத்தை, அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகியதும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே, ஓ.பன்னீர்செல்வம் வீனஸ் காலனி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் குடியேறினார். இருப்பினும், கட்சி நிர்வாகிகளுடன் அவர் தென் பெண்ணை வீட்டிலேயே ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று பொதுப்பணித் துறை சார்பில் அடுத்த 14 நாட்களுக்குள், அதாவது 2 வாரத்துக்குள் வீட்டை காலி செய்யும்படி, ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.