Published : 17 Jun 2017 09:14 AM
Last Updated : 17 Jun 2017 09:14 AM

தமிழக கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.467 கோடி செல்லாத நோட்டுகளை நபார்டு வங்கி எடுத்துக்கொள்கிறது: அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.467 கோடிக்கான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொள்வ தாக நபார்டு வங்கி கூறியிருக் கிறது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 58 லட்சத்து 57 ஆயிரத்து 408 விவசாயிகளுக்கு ரூ.27 ஆயிரத்து 442 கோடியே 22 லட்சம் பயிர்க்கடன் வழங்கப் பட்டுள்ளது. 2016-17ம் நிதியாண் டில் வறட்சி, மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை கள் போன்ற இடையூறுகள் இருந்தாலும் 7 லட்சத்து 62 ஆயிரத்து 772 விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 227 கோடியே 98 லட்சம் பயிர்க்கடன் வழங்கப் பட்டுள்ளது. நடப்பு நிதியாண் டில் கடந்த மே 31 வரை 59 ஆயிரத்து 208 விவசாயி களுக்கு ரூ.381 கோடியே 23 லட்சம் பயிர்க்கடன் வழங்கப் பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையின் வைப்புத் தொகை ரூ.57 ஆயிரத்து 9 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2006-11 வரை யிலான திமுக ஆட்சியில் ரூ.26 ஆயிரத்து 247 கோடியாக இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையில் 2,209 நியாயவிலைக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.2 கோடியே 53 லட்சத்தில் இந்த ஆண்டு மேம்படுத்தப்படும். கூட்டுறவு நிறுவனங்களில் சூரிய ஒளி மின்கலம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ரூ.4.32 கோடி யில் ஏற்படுத்தப்படும். 10 கூட்டுறவு நிறுவனங்களுக்குச் சொந்தமான காலியிடங்களில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளுக்கு தேவையான காய்கறிகள் விளைவிக்க உட் கட்டமைப்பு வசதிகள், திருச்சி யில் 8 புதிய பண்ணை பசுமை கடைகள், 1 நடமாடும் பசுமை நுகர்வோர் கடை ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மானியக் கோரிக்கை விவா தத்தில் திமுக உறுப்பினர் எ.வ.வேலு பேசும்போது, ‘‘கூட்டுறவு வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.450 கோடிக்கு இருப்பதை நபார்டு வங்கி கண்டறிந் துள்ளது. அது மக்கள் பணம் தானே?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ‘‘கூட்டுறவு வங்கிகளில் ரூ.467 கோடி உள்ளது. அதேநேரம், பண மதிப்புநீக்க விஷயத்தில் கூட்டுறவுத் துறை சிறப்பாக செயல்பட்டதாக ரிசர்வ் வங்கி சான்றிதழே வழங்கியுள்ளது. இத்தொகையை எடுத்துக் கொள்வதாக நபார்டு வங்கியே கூறியுள்ளது. இதுசம்பந்தமாக நபார்டு அதிகாரிகளிடம் முதல் வர் கே.பழனிசாமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வலியுறுத்தியுள்ளனர். ரிசர்வ் வங்கிக்கு தலைமைச் செயலர் கடிதமும் எழுதியுள்ளார்’’ என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x