

பழவந்தாங்கலில் சுரங்கப் பாதையின் மீது நடந்து சென்றவர், ரயிலில் அடிபடுவதில் இருந்து தப்பிக்க கீழே குதித்தபோது பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே ஒரு சுரங்கப் பாதை உள்ளது. அந்த சுரங்கப் பாதையில் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் வாகனங்களி லும், நடந்தும் சென்று கொண்டிருந்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சுரங்கப்பாதையின் மேல் உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றார். அப்போது ஒரு மின்சார ரயில் வரவே, அவர் ஒதுங்கி நிற்பதற்கு இடமில்லாமல் தவித்தார். பின்னர் ரயில் தன் மீது மோதாமல் இருக்க சுரங்கப்பாதையின் மீதிருந்து கீழே குதித்தார். அப்போது சுரங்கப்பாதையின் தடுப்புச் சுவரில் அவரது தலை இடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
அடையாளம் தெரியவில்லை
இறந்தவரைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.