ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் 2014-ல் சிபிஐ இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசிடம் முறையான முன் அனுமதி பெறாமல் சிபிஐ அதிகாரியாக இவர் பதவியேற்றார் எனக்கூறி இவரது நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், அர்ச்சனா ராமசுந் தரம் நேபாளம், பூடான் எல்லை பாதுகாப்பு படையின் முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அவர் முறை யான முன் அனுமதி பெறவில்லை எனக்கூறி அவரை பணியில் இருந்து நீக்கி தமிழக அரசு நட வடிக்கை எடுத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அர்ச்சனா ராமசுந்தரம் சென்னை யில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந் தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ‘‘உடனடியாக பணியில் சேர வேண்டும் என மத்திய அரசு உத் தரவிட்டதன் காரணமாக அவர் தமிழக அரசிடம் முன் அனுமதி கோராமல் பணியில் சேர்ந்துள்ளார். அகில இந்திய பணியில் உள்ள அவர், மத்திய அரசு உத்தரவுப் படிதான் நடந்துள்ளார். மாநில அரசின் கீழ் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஒழுங்கீனமாகவோ அல்லது முறைகேடாகவோ செயல்பட்டால் மட்டுமே மாநில அரசு நடவ டிக்கை எடுக்க முடியும். எனவே அர்ச்சனா ராமசுந்தரம் மீது தமிழக அரசு சுமத்தியுள்ள குற்றச்சாட்டு மற்றும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன’’ என குறிப் பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in