Published : 29 Jun 2016 09:38 AM
Last Updated : 29 Jun 2016 09:38 AM

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி: தூத்துக்குடி, நாகை மாவட்ட திமுக செயலாளர்கள் நீக்கம்

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி யைத் தொடர்ந்து திமுகவில் மேலும் 3 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டு, புதிய பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கே.ராஜாராம், நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம், நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற வசதியாக அ.சுப்பிர மணியன் (தூத்துக்குடி வடக்கு), நிவேதா எம்.முருகன் (நாகை வடக்கு), என்.கவுதமன் (நாகை தெற்கு) ஆகியோர் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப் படுகின்றனர். ஏற்கெனவே தேர்ந் தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகி கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர் களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 172 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்றன. 31 தொகுதிகளில் 5 ஆயிரத்துக் கும் குறைவான வாக்குகள் வித் தியாசத்தில் திமுக கூட்டணி வேட் பாளர்கள் தோல்வி அடைந்தனர். இதனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்தது.

கருணாநிதி எச்சரிக்கை

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கடந்த மே 24-ம் தேதி நடைபெற்ற திமுக செயற்குழு கூட் டத்தில், தோல்வி அடைந்த வேட் பாளர்கள், தாங்கள் எப்படியெல் லாம் தோற்கடிக்கப்பட்டோம். திமுக நிர்வாகிகள் தங்களுக்கு எதிராக எப்படியெல்லாம் வேலை செய்தனர் என்பதை கண்ணீருடன் எடுத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, ‘எதிரிகளைக்கூட மன்னிக்கலாம். துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்திருந்திருந்தார்.

திமுக வேட்பாளர்கள், தொண் டர்கள் அளித்த புகார்களின் அடிப் படையில் மாற்று அணிக்கு சாதக மாக நடந்துகொண்ட நிர்வாகிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அத னைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி கோவை மாநகர் வடக்கு, நாமக் கல் கிழக்கு, திருநெல்வேலி மேற்கு ஆகிய 3 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டனர். பல மாவட்டங்களில் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பலரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக மேலும் 3 மாவட்டச் செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகப் பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கீழ்வேளூர் தவிர மற்ற தொகுதிகளில் திமுக கூட் டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். எனவே, இந்தப் பகுதி களைச் சேர்ந்த மாவட்டச் செய லாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்ட நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் முன்னாள் எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x