சென்னை சில்க்ஸ் தீவிபத்து: லாக்கரில் இருந்த 400 கிலோ தங்கம் என்னவானது?

சென்னை சில்க்ஸ் தீவிபத்து: லாக்கரில் இருந்த 400 கிலோ தங்கம் என்னவானது?
Updated on
2 min read

தீ விபத்து நடந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை முழுவதுமாக இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள குமரன் தங்க மாளிகையின் இடிபாடுகளுக்குள் 400 கிலோ தங்கம், ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகள் சிக்கியுள்ளதாக கூறப் படுகிறது. கட்டிட இடிபாடுகளை அகற்றிய பிறகே, அவற்றை மீட்க முடியும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.

சென்னையின் வர்த்தக மைய மான தி.நகரில் ‘தி சென்னை சில்க்ஸ்’ 7 மாடி கட்டிடத்தில் கடந்த 31-ம் தேதி அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இதில், பல கோடி மதிப்புள்ள ஜவுளி கள், பொருட்கள் எரிந்து நாசமாகின. தரைதளத்தில் இருந்த குமரன் தங்க மாளிகையும் முற்றிலும் சேதம் அடைந்தது. அடுத்த நாளான ஜூன் 1-ம் தேதி மதியம் தீ கட்டுக் குள் கொண்டுவரப்பட்டது.

34 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து தீ எரிந்ததால் கட்டிடத் தின் தூண்கள், சுவர்கள் பலவீன மடைந்தன. கட்டிடத்தின் சில பகுதி கள் இடிந்தும் விழுந்தன. இதை யடுத்து, கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. கட்டிடத்தை இடிப்பதற்கான ஆயத்தப் பணி கள் நேற்று முன்தினம் இரவு தொடங் கின. இதையொட்டி, கட்டிடத்தைச் சுற்றி போலீஸார் தடுப்பு வேலிகளை அமைத்தனர். கட்டிடம் அருகே யாரையும் நெருங்கவிடவில்லை. நேற்று 3-வது நாளாக அப்பகுதி யில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்த நிலையில், கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கியது. 2 ராட்சத ‘ஜா கட்டர்’ இயந்திர வாகனங்களைக் கொண்டு இடிக் கும் பணி நடந்தது. ஜா கட்டர் இயந்திரத்துக்கு ஒரு மணி நேர வாடகை ரூ.20 ஆயிரம் என கூ றப்படுகிறது. இக்கருவி 5 மாடி உயரம் வரை மட்டுமே இடிபாடு களை அகற்றும் வகையில் இருந் தது. இதனால், முதல் 2 தளத்துக்கு கட்டிட கழிவுகள் நிரப்பப்பட்டன. அதன் மீது இயந்திரம் ஏற்றப்பட்டு இடிக்கும் பணி தொடங்கியது. அகற் றப்படும் இடிபாடுகள் உடனுக்குடன் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட் டன. தூசி, புழுதி பறக்காமல் இருக்க இடிபாட்டுக் கழிவுகள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது.

இடிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. கட்டிடம் 3 நாட்களில் முழுமையாக இடிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், குறைந்தது ஒரு வாரம் ஆகும் என கட்டிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பின்புற கட்டிடத்தில் விரிசல்

இதற்கிடையில், சென்னை சில்க்ஸ் பின்புறம் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந் துள்ளது. சேதம் அடைந்த வீடுகளை சரிசெய்து தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி சென்னை சில்க்ஸ் அதிகாரிகளிடம் நேரிலும் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், கட்டிடத்தின் ஒரு பகுதியில் நேற்று மீண்டும் லேசாக தீ பரவியது. வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

400 கிலோ தங்கம்

தீப்பிடித்ததில், ரூ.80 கோடி மதிப்பிலான ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானதாக போலீஸார் கணித்துள்ளனர். கடையின் தரைதளத்தில் குமரன் தங்க மாளிகை என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. இங்கு தங்க, வைர நகைகள் ஏராளமாக இருந்துள்ளன. இங்குள்ள பாது காப்பு பெட்டகத்தில் சுமார் 400 கிலோ தங்க நகைகள், ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இடிக்கப் படும் கட்டிடத்தின் தரைதளத்தி லேயே இந்த நகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. கட்டிட இடிபாடு களை அகற்றிய பிறகுதான் இவற்றை வெளியே எடுக்க முடியும் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை பெட்டகத் தில் வைக்காமல் வெளியில் வைத் திருந்ததாகவும், அவை தீயில் உருகி யிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், கட்டிடத்தைச் சுற்றி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெறிச்சோடிய தி.நகர்

விபத்து நடந்த பகுதியைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்குள் யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. செய்தியாளர்கள்கூட அடையாள அட்டைகளைக் காட்டிய பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அருகே உள்ள கடைகள், சாலையோரக் கடைகள் செயல்படவில்லை. மக்கள் கூட்டமும் குறைந்ததால் தி.நகர் வெறிச்சோடி காணப் பட்டது. அப்பகுதியில் மின்சாரம், தண்ணீர் விநியோகமும் துண்டிக் கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் தீ விபத்து நடந்த சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் தங்க மாளிகை கட்டிடங்களை ராட்சத ‘ஜா கட்டர்’ இயந்திர வாகனங்களைக் கொண்டு இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in