வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய ஒரே நாளில் 7.30 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய ஒரே நாளில் 7.30 லட்சம் பேர் விண்ணப்பம்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய 7 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் அக் டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அட்டவணை எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்காக அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் செப்டம்பர் 11, 25 ஆகிய ஞாயிற் றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித் தது. www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை 29 ஆயிரத்து 736 மையங்களில் அமைக்கப்பட்டி ருந்த 65 ஆயிரம் வாக்குச் சாவடி களில் சிறப்பு முகாம்கள் நடை பெற்றன.

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து 5 லட்சத்து 77 ஆயிரத்து 675 பேர் விண்ணப்பித்துள்னர். வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க படிவம் 7-ஐ பூர்த்தி செய்து 19 ஆயிரத்து 852 பேரும், திருத்தம் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து 86 ஆயிரத்து 988 பேரும், முகவரியை மாற்ற படிவம் 8-ஏ-ஐ பூர்த்தி செய்து 45 ஆயிரத்து 577 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 48 ஆயிரத்து 616, கோவை மாவட்டத்தில் 39 ஆயிரத்து 518 பெறப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 952 விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள், இணையதளம் மூலம் ஒரே நாளில் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அலு வலக நாள்களில் 21 ஆயிரத்து 920 பேர், இணையதளம் மூலம் 50 ஆயிரம் பேர் என கடந்த 12 நாள்களில் 8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சாவடி அளவில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் மேலும் அதிகமானோர் விண்ணப்பிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in