Published : 15 Apr 2017 09:03 AM
Last Updated : 15 Apr 2017 09:03 AM

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்திய மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் கைது

கோவில்பட்டியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, அம்பேத் கருக்கு மரியாதை செலுத்திய மத்திய ரிசர்வ் போலீஸ்காரரை போலீஸார் கைது செய்தனர்.

அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில், எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள அம்பேத் கர் சிலைக்கு நேற்று காலை முதலே கட்சியினர் மற்றும் பல் வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர். பகல் 12 மணியள வில் அம்பேத்கர் சிலை அருகே பலர் திரண்டிருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஓர் இளை ஞர் திடீரென வானத்தை நோக்கி சுப்பாக்கியால் சுட்டார். பயங்கர சத்தத்துடன் தோட்டா வெடித்த தால், அங்கிருந்தவர்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி கிழக்கு போலீ ஸார் அங்கு வந்து, அந்த இளை ஞரைப் பிடித்து காவல் நிலையத் துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர், கோவில் பட்டி அருகே உள்ள கீழஈரால் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த பவுன் ராஜ்(31) என்பதும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 179-வது பட்டாலியனைச் சேர்ந்த இவர், ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் விடு முறையில் இவர் ஊருக்கு வந்துள் ளார்.

தனது சொந்த பயன்பாட்டுக் காக, உரிமம் பெற்று 70 எம்.எம். இரட்டைக் குழல் ரக துப்பாக்கியை வைத்திருந்தார். அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த துப்பாக்கியுடன் வந்தபோது, உணர்ச்சிவசப்பட்டு வானத்தை நோக்கி சுட்டுவிட்டதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்துள் ளார். பவுன்ராஜை போலீஸார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் 2 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x