Published : 14 Mar 2017 08:54 AM
Last Updated : 14 Mar 2017 08:54 AM

ஆர்.கே.நகரில் தேர்தல் செலவின விலக்கு பெற 23-க்குள் பிரச்சார தலைவர்கள் பட்டியல்: கட்சிகளுக்கு ராஜேஷ் லக்கானி வேண்டுகோள்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி யிடும் கட்சிகள் தேர்தல் செலவின விலக்கு பெற, பிரச்சாரத்துக்கு வரும் தலைவர்களின் பட்டியலை 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதி காரி ராஜேஷ் லக்கானி தெரி வித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவைத் தொடர்ந்து காலியான சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறி விக்கப்பட்ட மார்ச் 9-ம் தேதி முதல், நடத்தை விதிகள் அம லுக்கு வந்தன. இதையடுத்து, தேர்தலுக்கான ஆயத்தப் பணி களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மேற் கொண்டு வருகிறார். இந்நிலை யில், அரசியல் கட்சித் தலைவர் களின் பிரச்சாரம் தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள் ளார். அதில் கூறியிருப்பதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் படி, அரசியல் கட்சிகளின் தலை வர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, விமானம் உள் ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையைப் பெற, பிரச் சாரம் செய்யும் தலைவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத் திடம் அளிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், அங்கீகாரமற்ற கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்த தலைவர்கள் பட்டியலை, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதில் இருந்து 7 நாட்களுக்குள் சமர்ப் பிக்க வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அறி விக்கை வரும் 16-ம் தேதி வெளி யிடப்படுவதால், 23-ம் தேதிக்குள் இந்த பட்டியலை வழங்க வேண் டும். இந்த பட்டியலில் உள்ளவர் களின் பயணச் செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திரத் தலைவர் பிரச்சாரம் செய்தால், அதில் விலக்கு கோர முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x