Published : 12 Jan 2017 10:33 AM
Last Updated : 12 Jan 2017 10:33 AM

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் 4 பேர் சரண்

புதுச்சேரி மாநில முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான வி.எம்.சி.சிவக்குமார், கடந்த 3-ம் தேதி காரைக்கால் மாவட்டம் நிரவியில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் இருந்தபோது மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து நிரவி போலீஸார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

போலீஸாரால் தேடப்பட்டு வரும் காரைக்காலைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ராமுவின் 2-வது மனைவி எழிலரசி திண்டுக்கல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். இதனிடையே சிவக்குமாரின் பாதுகாவலரிடம் இருந்து கொலையாளிகள் பறித்துச் சென்ற துப்பாக்கியை நாகை மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் உள்ள புதரில் இருந்து போலீஸார் மீட்டனர்.

சிவக்குமாரின் மகன் ராஜகணபதி வழக்கறிஞராக இருப்பதால் புதுச்சேரி நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சரணடைய வந்தால் அவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது என புதுச்சேரி பார் கவுன்சில் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், சிவக்குமார் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த பிரபு, சூரிய பிரகாஷ், கார்த்திக், சண்முகம் ஆகிய 4 பேர் நேற்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பார் கவுன்சில் முடிவை மீறி அவர்கள் சார்பில் புதுச்சேரி வழக்கறிஞர் ஒருவரும், விழுப்புரம் வழக்கறிஞர்கள் 2 பேரும் ஆஜராகினர். அப்போது அங்கு வந்த புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, சரணடைந்தோரை ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்கவும், போலீஸ் பாதுகாப்புடன் காரைக் கால் நீதிமன்றத்தில் வியாழக் கிழமை (இன்று) ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து சரண் அடைந்த 4 பேரும் பலந்த போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரியில் உள்ள காலாப்பட்டு மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சரணடைந்தோரை காவலில் எடுத்து விசாரணை நடத்த நிரவி போலீஸார் மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

புதுச்சேரி பார் கவுன்சில் பொதுச் செயலாளர் தனசேகர் கூறும்போது, “சிவக்குமார் கொலை சம்பவத்தில் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண டைய வருபவர்களுக்காக வழக் கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி யிருந்தோம். ஆனால் அதை மீறி சரணடைய வந்தவர்களுக்கு ஆஜ ராகிய புதுச்சேரி வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x