

புதுச்சேரி அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 50 பேர் காயமடைந்தனர்.
காட்டேரிகுப்பத்தில், சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிட முயற்சித்தபோது பேருந்து எதிர்பாராதவிதமாக அருகில் இருந்து வயலில் கவிழ்ந்தது.
பேருந்தில் இருந்த 50 பேரும் காயமடைந்தனர். இதில் 10 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.