ராம்குமாரை புழல் சிறைக்குள் வைத்தே வீடியோ எடுக்க அனுமதிக்க வேண்டும்: எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் மனுதாக்கல்

ராம்குமாரை புழல் சிறைக்குள் வைத்தே வீடியோ எடுக்க அனுமதிக்க வேண்டும்: எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் மனுதாக்கல்
Updated on
1 min read

சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராம்கு மாரை பாதுகாப்பு காரணம் கருதி புழல் சிறை வளாகத்தில் வைத்தே வீடியோ எடுக்க அனுமதிக்கக் கோரி போலீஸார் எழும்பூர் நீதிமன் றத்தில் புதிதாக மனுதாக்கல் செய்துள்ளனர்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலை யத்தில் இளம் பெண் சுவாதி கொலை செய்யப்பட்டது தொடர் பாக, ராம்குமார் கைது செய்யப் பட்டு சிறையில் உள்ளார். ராம் குமாரை ஏற்கெனவே 3 நாட்கள் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்தபோது கைப்பற் றப்பட்ட வீடியோ ஆதாரங்களுடன் ராம்குமாரை ஒப்பிட்டுப் பார்க்கவும், சூளைமேடு மேன்சனில் தங்கி யிருந்த போது ஏற்கெனவே ராம்குமார் கையெழுத்திட்டுக் கொடுத்த ஆவணங்களுடன், ராம்குமாரின் தற்போதைய கையெழுத்தை சரிபார்க்கவும் ஒப்பிட்டுப் பார்க்கவும் நீதிமன்ற அனுமதி வேண்டி ஏற்கெனவே போலீஸ் தரப்பில் தாக்கல் செய் யப்பட்ட மனுவில், ஆகஸ்டு 8-ம் தேதியன்று நீதிமன்ற பாதுகாப் புடன் சிறைத்துறை போலீஸார் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வைத்து வீடியோ பதிவு செய்து கொள்ள எழும்பூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் போலீஸ் தரப்பில் அரசு உதவி வழக்கறிஞர் ஆர்.கொளஞ்சிநாதன் எழும்பூர் 14-வது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் மனுவில், ‘‘ராம்குமாரை அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே காலை வேளையில் வைத்து வீடியோ பதிவு செய்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு ஏற்படும். அத்துடன் இதற்காக அளவுக்கு அதிகமான போலீ ஸாரை அந்த பகுதியில் குவித் தால் பொதுமக்களுக்கும் இடையூ றாக இருக்கும். எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக ராம்குமாரை புழல் சிறை வளாகத் துக்குள் வைத்தே வீடியோ எடுத்து ஒப்பிட்டுப் பார்க்க அனு மதிக்க வேண்டும்’’ என அதில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற குற்றவியல் நடுவர் கோபிநாதன் இந்த மனு மீதான விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in