

திருவள்ளூர் கதர் அங்காடியில், மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கதர் சிறப்பு விற்பனையை நேற்று முன் தினம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கிவைத்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம், கதர் துணி யின் உற்பத்தி மற்றும் கிராம புறங்களில் உற்பத்தி செய்யப் படும் பொருட்களின் பயன் பாட்டினை அதிகரித்து, விற்பனை செய்வதன் மூலம் கிராமப்புற மக்களின் மேம் பாட்டுக்கு சிறந்த செயலாற்றி வருகிறது.
அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் மற்றும் திருத்தணியில் உள்ள இரு கதர் அங்காடிகள் கடந்த 2013-14-ம் ஆண்டில், 40.11 லட்சம் ரூபாய்க்கு கதர் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்துள்ளன.
நடப்பு ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரசு அலுவலர் கள், பொதுமக்கள் கதர் மற்றும் கைவினைப் பொருட்களை வாங்கி, ஏழை, எளிய நெச வாளர் களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.