

எஸ்ஆர்எம் கல்விக் குழு மத்தை உயர்நிலைக் குழு விசா ரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
வேந்தர் மூவீஸ் மதன், மருத் துவக் கல்லூரி இடங்களுக்காக 100-க்கும் மேற்பட்ட மாணவர் களிடம் பணம் வசூலித்துள்ளார். எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி இடங்கள் மதனுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு பின்னர் அது விற்கப்பட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தை பச்சமுத்துவிடம் கொடுத்துள்ள தாக மதன் சொல்கிறார்.
தனக்கும் மதனுக்கும் சம்பந் தம் இல்லை என்று பச்சமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் சார்பில் சென்னை வளசர வக்கம் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், மதன் ரூ.200 கோடி பணத்துடன் தலைமறைவாகிவிட் டார் என கூறியுள்ளனர். தொடர்பே இல் லாத ஒருவரிடம் ரூ.200 கோடி பணம் எப்படி சென்றது?. இந்த பணம் மருத்துவக் கல்லுரிக்கு எப்படி வந்தது? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.
பண விவகாரத்தில் மோதல் காரணமாக மதன் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. எனக்கு கிடைத்த தகவலின்படி மதன் டெல்லி போலீஸாரிடம் சிக்கி உள்ளதாக தெரிகிறது.
1969-ம் ஆண்டு பச்சமுத்து சென் னையில் லாரன்ஸ் நைட்டிங்கேர்ள் என்ற பள்ளியை தொடங்கினார். 20 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை தொடங்க பணம் எங்கிருந்து வந்தது?. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் இன்றைய மதிப்பீடு ரூ.20 ஆயிரம் கோடிக்கு அதிகமிருக்கும் என்று கூறப்படுகிறது. 500 சொகுசு பேருந்துகள், மருத்துவமனை, ஹோட்டல், தொலைக்காட்சி, வார மற்றும் மாத இதழ்கள் என 100-க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என தெரியவில்லை. 20 ஆயிரம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு அவரிடமிருந்து மீட்க வேண்டும். அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்படும் எஸ்ஆர்எம் கல்விக் குழுமத்தை உயர்நிலைக் குழு விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.