

நாகர்கோவிலில் மதிமுக நிர்வாகி யின் இல்லத் திருமண விழாவில் வைகோ பேசியதாவது:
என் வாழ்வில் நேர்மை என்னும் ஒரு கவசம்தான் என்னை காத்துக் கொண்டு இருக்கிறது. அந்த கவசத்தையும் உடைக்க முயற்சி செய்கின்றனர். வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து ‘கரப்ஷன் சோஷலிசத்தை’ ஏற் படுத்திய பெருமை தமிழகத்தைச் சாரும். தேர்தலில் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய முடியும் என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
முல்லை பெரியாறு பிரச்சினை யில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு கருத்தை தெரிவித் தார். இதனால், அவருக்கு அவ ரது கட்சிக்குள்ளேயே கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
வருத்தம் தெரிவித்த வைகோ
வைகோ வருவதற்கு முன் திருமண மண்டபம் அருகே பத் திரிகையாளர்கள் காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த சில மதிமுக நிர்வாகிகள், பத்திரிகை யாளர்களை அவதூறாக பேசியதால் ஆத்திரம் அடைந்த பத்திரிகையாளர்கள் அவ்வை சண்முகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் வைகோ வந்த காரும் சிக்கிக்கொண்டது. உடனே, வைகோ காரில் இருந்து இறங்கி வந்து, நடந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், தனது கட்சியினரின் செயலுக்காக வருத்தம் தெரிவித்த வைகோ, சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்து அவர்களையும் வருத்தம் தெரிவிக்கச் செய்தார்.