

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் பத்து மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் யாரும் பணிக்கு வரவில்லை.
இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் 6-வது மாடியில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்றதைப் பார்த்த தனியார் காவலர் திடுக்கிட்டார்.
உடனே அங்கு போலீஸாரும் விரைந்தனர். அது குறித்து கோட்டை வளாகத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தேடிப் பார்த்தனர். ஆனால், பாம்பு அதற்குள் எங்கோ சென்று மறைந்துவிட்டது