

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடி யாக தடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே பாடவயல், தேக்கு வட்டை, மஞ்சகண்டி, சீரக்கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டுவதற்கு திட்டமிட்டு தற்போது தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்டும் பணிகளை சட்ட விதி முறைகளை மீறி காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான வகையில் தொடங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை மற்றும் நீதிமன் றம் மூலம் போர்க்கால அடிப் படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்கில் தமிழக அரசு புதிதாக விண்ணப் பித்து தடையாணை பெற்று, தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.