மீத்தேன் திட்ட விவகாரம்: டி.ஆர். பாலுவுக்கு எதிராக வலைதளப் பிரச்சாரம்

மீத்தேன் திட்ட விவகாரம்: டி.ஆர். பாலுவுக்கு எதிராக வலைதளப் பிரச்சாரம்
Updated on
1 min read

டி.ஆர். பாலுவின் சாதனைகளை விளக்கும் அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்த மீத் தேன் திட்டத்துக்கான அவரது பங்களிப்பை உறுதி செய்யும் பக்கம் அகற்றப்பட்டுள்ளது. இதை வைத்தே மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்கள் பாலுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரு கின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் 667 சதுர கி.மீ. பரப்பளவில் மீத்தேன் எரிவாயுவை உறிஞ்சி எடுக்கும் உரிமம் `கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனத்துக்கு 2010-ல் மத்திய அரசால் வழங்கப்பட்டது.

2011-ல் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் திட்டத்தை எதிர்த்து இப்போது டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. முதல்வர் ஜெய லலிதா, இத்திட்டத்துக்கு தாற் காலிக தடை விதித்து, இதைக் கொண்டுவந்த தி.மு.க-வையும் கடுமையாக சாடி வருகிறார். தி.மு.க-வும் மத்திய அரசு இத்திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டி.ஆர். பாலு அண்மையில் தஞ்சைக்கு வந்தபோது, ``நீங்கள் தான் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறதே. இந்தத் திட்டத்தில் உங்களது நிலைப்பாடு என்ன?’’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``இத்திட்டத்தால் அதிக அளவில் நிலத்தடி நீர் வெளியேற்றப்பட்டு, கடல் நீர் உள்ளே புகும் என்பதால் விவசாயம் பாதிக்கும். அதனால் திட் டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினார்.

www.trbaalu.in என்ற டி.ஆர்.பாலுவின் சாதனைகளை விளக்கும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், `நான் பெட் ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவில் நிலக்கரி படிமத்திலிருந்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக் கான கொள்கை வகுப்பதிலும் செயல்வடிவம் தருவதிலும் பங்கு வகித்தேன்’ என்று 17-ம் தேதி இரவு வரை காணப்பட்ட டி.ஆர். பாலுவின் அந்த பக்கம் மட்டும் செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னரே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த அந்தப் பக்கத்தை இப்போது சுற்றுக்கு விட்டுள்ளனர் மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்கள்.

மறைக்கப்பட்ட இணையதள பக்கம் பற்றி டி.ஆர்.பாலுவிடம் கேட்டபோது, ``1996-ல் நான் பெட்ரோலியம் துறை அமைச்சராக இருந்தபோது ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் கண்டுபிடித்தது குறித்தே எனது இணையதளத்தில் தெரிவித்துள்ளேன். இங்கே மீத்தேன் எடுத்தால், கடல் நீர் உள்ளே புகுந்து விவசாய நிலங்கள் அழிந்துவிடும். நானும் இந்த ஊரில் பிறந்த ஒரு விவ சாயிதான். இங்கேதான் எனக்கு நிலங்கள் உள்ளன. ஜிஇஇசிஎல் நிறுவனத்துக்கு இங்கே மீத்தேன் இருக்கிறதா என்று சோதனை செய்யத்தான் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயிகளை பாதிக்கும் இத்திட்டத்தை கொண்டு வந்தால் நான் முதல் ஆளாக எதிர்ப்பேன். என்னை எதிர்ப்பவர்கள் விவரம் தெரியாமல் பேசுகின்றனர். எனது இணையதளம் அவ்வப்போது புதுப்பிக்கப்படும். அதில் எனது புதிய சாதனைகள் குறிப்பிடப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in