

கொடைக்கானல் வனப்பகுதி அருகே பட்டா காட்டில் ஏற்பட்ட தீயை வனப்பகுதிக்குள் பரவ விடாமல் வனத்துறையினர் தடுத்தனர்.
கொடைக்கானலில் வறட்சி யாலும், வெப்பத்தாலும் வனப் பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. இதைச் சாதகமாக பயன்படுத்தி சில சமூக விரோதிகள் வனப்பகுதியில் தீ வைப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானல் அருகே பெருமாள் கோயில் வனப்பகுதி அருகேயுள்ள பராமரிக்கப்படாத பட்டா காடுகளில் காய்ந்துகிடந்த புல், செடி கொடிகள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தன. இது வனப்பகுதிக்குள் பரவும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த வனத்துறையினர் குழுவினருடன் பெருமாள்மலை பகுதிக்குச் சென்று வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வனப்பகுதியில் தீ தடுப்பு எல்லையை உருவாக்கி பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட் டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இதையடுத்து வனப் பகுதியில் தீ பரவாமல் தடுக் கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா காடுகளில் தீ வைத்தால் தீ எளிதாக வனப்பகுதிக்குள் பரவ வாய் ப்புள்ளது. இதனால் தான் வனப்பகுதிக்குள் வராமல் காய் ந்த பட்டா நிலங்களில் சில சமூகவிரோதிகள் தீ வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இந்த ஆண்டு கடும் வறட்சி கார ணமாக வனப்பகுதியில் உள்ள செடிகொடிகள் காய்ந்து கிடக்கிறது. இது தீ எளிதில் பரவ ஏதுவாக இருக்கிறது.
24 மணி நேரமும் வனத்துறையினர் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். தீ பரவுவது தெரியவந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க மலைகிராம மக்களிடம் விழி ப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தீ வைத்த சமூகவிரோதிகள் விரைவில் பிடிபடுவர். இவர் களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.