செப்.2-ல் மறியல்: தொமுச பேரவை அறிவிப்பு

செப்.2-ல் மறியல்: தொமுச பேரவை அறிவிப்பு
Updated on
1 min read

தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங் களும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றன. தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்துக்கான 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

மேலும், விவசாயிகளுடைய நலனை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதால் உணவு உற்பத்தி குறைந்து, விலைவாசி உயர்வதை மத்திய அரசு கண்டும் காணாமல் இருப்பது மக்களிடையே வேதனையை உருவாக்கி உள்ளது. எனவே, செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்தை அனைத்து மக்களும் இணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, தொழிலாளர்களுக்கு சலுகைகளைப் பெற்றுத் தரும் சட்டங்களைத் திருத்துகிறோம் என்ற பெயரில் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், கார்பரேட் நிறு வனங்களின் முன்னேற்றத்துக் காகவும் தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களில் அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே, செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தின்போது அனைத்து மாவட்டங்களிலும் மறியல் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in