

யாழ்ப்பாணத்தில் புதிதாக உரு வாக்கப்பட்டு வரும் நூலகத்துக்கு புத்தகங்களை வழங்க வாசகர் களும், பதிப்பகத்தாரும் முன்வர வேண்டும் என ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை வேண்டு கோள் விடுத்துள்ளது. ஈரோடு புத்தக திருவிழாவில் இந்த நூல் கள் பெறப்பட்டு, தூதரகம் மூல மாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப் படவுள்ளன.
இதுதொடர்பாக மக்கள் சிந் தனைப் பேரவை தலைவர் த.ஸ்டா லின் குணசேகரன் வெளியிட்ட அறிக்கை: ஒரு நாட்டின் கலாச் சாரம், பண்பாடு, நாகரிகத்தை அழிக்க எண்ணுவோர், முதலில் அங்குள்ள நூலகங்களை நாச மாக்குவதையே உலகெங்கும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதேபோல், இலங்கை யாழ்ப் பாணத்தில் இருந்த பொது நூலக மும் இவ்வாறுதான் தீக்கிரையாக் கப்பட்டது. அரிதினும் அரிதான தமிழ் நூல்கள், ஆவணங்கள் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள், நூலக கட்டிடத்துடன் இணைந்து சாம்பலாயின. நூலக எரிப்பு என்பது ஒரு இனத்துக்கு எதிரான, கண்ணுக் குத் தெரியாத, சக்திவாய்ந்த விஷமம் கலந்த பெரும் யுத்தம்.
தற்போது தமிழர்களின் முயற்சி யால் யாழ்ப்பாணத்தில் நூலகக் கட்டிடம் எழுப்பப்பட்டுவிட்டது. கடந்த மாதம் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் யாழ்ப்பாண நூலகத்துக்கு நான் நேரடியாகச் சென்று நூலக அதிகாரிகளுடன் பேசி, அவர்களின் தற்போதைய தேவையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது நூலக கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், இழந்த நூல்களை சேகரிக்கும் பணி அங்கு போர்க் கால அடிப்படையில் தொடங்கி இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள சில நல் லெண்ணம் கொண்ட மனிதநேய மிக்க அமைப்புகள், இலங்கை தூதர் மூலமாக அதிகாரப்பூர்வமாக யாழ்ப்பாண நூலகத்துக்கு புத்த கங்களை அளிக்க முன்வந்துள்ள னர். அவ்வாறான அமைப்புகளு டன் சேர்ந்து மக்கள் சிந்தனைப் பேரவை தனது பங்களிப்பாக ஏராளமான நூல்களை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வரக்கூடிய வாசகர் கள், யாழ்ப்பாண நூலகத்துக்கு வழங்க விரும்பும் நூல்களை வாங்கி, திருவிழா அரங்கில் செயல்படும் மக்கள் சிந்தனைப் பேரவை அரங்கில் கொடுத்து தங்கள் பெயரை பதிவு செய்ய லாம். அதேபோல், புத்தகத் திரு விழாவின் நிறைவின்போது, திரு விழாவில் பங்கேற்றுள்ள பதிப் பகங்களைச் சேர்ந்தவர்கள் தங்க ளால் இயன்ற அளவு புத்தகங் களை வழங்கலாம்.
புத்தகத் திருவிழா நிறைவு நாளன்று சேகரிக்கப்பட்ட புத்தகங் கள், உரிய அமைப்பினரிடம் ஒப் படைக்கப்பட்டு இலங்கைத் தூதர் மற்றும் அரசு அதிகாரிகள் மூல மாக யாழ்ப்பாணத்தில் அமைந் துள்ள பொது நூலகத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது என்றார்.