

தமிழக அரசு இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய தொலைத் தொடர்புத் துறையின் குவைத் திட்டப் பணிகளுக்கு 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 30 வயதுக்கு உட்பட்ட பிஇ/பிடெக் தேர்ச்சி பெற்ற கட்டிடப் பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர். மாத ஊதியம் ரூ.56,000. பிளஸ் 2 அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்ற பைபர் ஸ்பைலைசர்கள் தேவை. மாத ஊதியம் ரூ.28,800.
10-ம் வகுப்பு தேர்ச்சி, குவைத் நாட்டின் ஓட்டுநர் உரிமத்துடன் 2 ஆண்டு பணி அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்கள் தேவை. மாத ஊதியம் ரூ.19,500. இந்திய ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களுக்கு மாத ஊதியம் ரூ.16,750 வழங்கப்படும். 10-ம் வகுப்பு வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் தொலைத் தொடர்புத் துறையில் அனுபவம் பெற்ற லேபர்கள் தேவை. மாத ஊதியம் ரூ.15,600.
இந்த பணியிடங்களுக்கு omcresum@gmail.com என்ற இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.