

தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான டீமேஜ் பில்டர்ஸ் நிறுவனம் காங்கேயம் அருகில் உள்ள ஓலப்பாளையம் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ப்ரீ-காஸ்ட் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டி டங்களை விரைவாகவும், உறுதி யாகவும், தரமாகவும் குறித்த காலத்துக்குள்ளும் கட்டிவருகிறது.
இதையறிந்த மத்திய அரசு, சிஆர்பிஎப் காவலர்களுக்கான 252 வீடுகளை 11 மாதங்களில் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்நிறுவனத்துக்கு அளித்தது.
இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சிஆர்பிஎப் தலைமை இயக்குநர் துர்கா பிரசாத் தலை மையில் நடைபெற்றது. கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியை மத்திய அரசின் பொதுப் பணித் துறை இறுதி செய்தது.
இதனையடுத்து நவீன தொழில் நுட்ப முறையில் 16 வீடுகள் அடங்கிய ஒரு பிளாக் 75 நாட் களில் கட்டி முடிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது. சிஆர்பிஎப் தலைமை இயக்குநர் துர்கா பிரசாத் திறந்துவைத்தார்.
இதுபற்றி டீமேஜ் பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் என்.கே.நந்தகோபால் கூறும்போது, “மீதமுள்ள 10 பிளாக்குகளின் வேலைகள் நடைபெற்று வரு கின்றன. குறித்த நாளில் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும்” என்று பெருமையுடன் கூறினார்.