Published : 05 Jan 2016 10:48 AM
Last Updated : 05 Jan 2016 10:48 AM

ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தைகளை மீட்க மதுரை ஆசிரியர் உருவாக்கிய ரோபோ கருவியை வாங்க திட்டம்: தேசிய பேரிடர் மீட்புப் படை பரிசீலனை

மதுரை ஆசிரியர் தயாரித்துள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தைகளை மீட்கும் நவீன ரோபோ கருவியை தமிழக அரசு வாங்கியுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையும் அந்த ரோபோவை வாங்க பரிசீலித்து வருகிறது.

மதுரையை சேர்ந்த ஆசிரியர் மணிகண்டன் (44). இவர் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிடும் குழந்தைகளை மீட்பதற்காக, நவீன ரோபோ கருவியை தயாரித்துள்ளார். இந்த ரோபோ கருவி மூலம் கடந்தாண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் ஹர்சன் உயிருடன் மீட்கப்பட்டான். இதனால் மணிகண்டனின் முயற்சிக்கு தேசிய அளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

மணிகண்டன் தயாரித்துள்ள கருவியின் செயல் பாடு குறித்து தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் ஆய்வு செய் தன. சென்னை ஐஐடி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங் கள் அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கின.

ஒரு கருவியின் விலை ரூ.60 ஆயிரம் வீதம் 3 கருவிகளை தமிழக அரசு வாங்கியது. இதையறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் மணிகண்டனிடம் இருந்து ரோபோ கருவியை வாங்கத் திட்டமிட்டுள்ளனர். இத்துறை ஏற்கனவே 7 குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளது. தாங்கள் எதிர்பார்க்கும் வசதியுடன் கருவியை என்ன விலைக்கு வழங்க முடியும் என கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து மணிகண்டன் கூறியதாவது: எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர். ஐடிஐ படித்த நிலையில் 17 ஆண்டுகளாக பொறியல் கல்லூரியிலும், 9 ஆண்டுகளாக மதுரை டி.வி.எஸ். சமுதாயக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்.

எனது மகன் திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழ இருந்த நிலையில் காப்பாற்றப்பட்டான். இந்த நிகழ்வு என் மனதை ஆழமாகப் பாதித்ததால் இப்படி விழும் குழந்தைகளைக் காப்பாற்ற உரிய கருவியை தயாரிக்கத் திட்டமிட்டேன்.

தொடக்கத்தில் சாதாரணமாக தயாரித்த கருவி ஓரளவு பலன் அளித்தது. பின்னர் கேமரா, சிறிய டிவி மானிட்டர் திரை, விளக்கு, பேட்டரியில் இயங் கும் இயந்திரம், ரத்த அழுத்தத்தை அறியும் கருவி என பல்வேறு வசதிகளுடன் புதிய கருவியை தயா ரித்தேன். இதன் எடை 5 கிலோ மட்டுமே. 50 கிலோ எடைவரை எளிதாக தூக்கும். 100 அடி குழாய், மின் வயர் உட்பட பல இணைப்பு சாதனங்களும் உள்ளன.

மிக எளிதாக ஆழ்துளை கிணற்றில் இறக்கி குழந்தைகளை மீட்க முடியும். தமிழக தீயணைப்பு துறை இந்த கருவியை வாங்கியுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையும் கருவி குறித்த முழு விவரங்களை கேட்டுள்ளது. அரக்கோணம், விஜயவாடாவில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் செயல் விளக்கம் காண்பித்தேன். தண்ணீரில் மூழ்கினாலும் கேமரா செயல்படும் வகையில் சில கூடுதல் வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டனர்.

இந்த வசதிகளுடன் ஒரு கருவியை உருவாக்க ரூ.72 ஆயிரம் ஆகும் என தெரிவித்தேன். விலை விவர பட்டியலை பெற்று, அரசின் அனுமதியைக் கேட் டுள்ளனர். 2003-ல் கருவியை தயாரிக்கத் தொடங்கி 2008-ல் முடித்தேன். இதை 2014-ல் நவீன கருவியாக மாற்றினேன். இதுவரை தமிழகம், கர்நாடகம் உட்பட 8 இடங்களில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்க சென்றுள்ளேன்.

3 முதல் 5 வயது குழந்தைகளே அதிகம் விழுகின்றன. அதிகபட்சம் 100 அடி ஆழத்துக்குள்தான் சிக்கிக்கொள்கின்றன. விழுந்ததும் மீட்புப் படையின ருக்கு தகவல் அளிப்பதுடன் ஆக்சிஜன், வெளிச்சம், தைரியமளிக்கும் பேச்சு அளிப்பது மிக முக்கியம். பக்கவாட்டில் தோண்டும்போது போதிய விழிப்புணர்வு இல்லாததால், குழந்தை மீது மண் விழுந்து மூடுவதால்தான் பல குழந்தைகள் இறந்துள்ளன.

உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தினால் 4 நாட்கள்கூட குழந்தையை உயிருடன் இருக் கச் செய்து மீட்டு விடலாம். 4ணி நேரத்துக்குள் சம்பவ இடத்துக்கு செல்லும் வகையில் ஆங்காங்கே கருவிகள் தயார் நிலையில் இருக்க வேண் டும். தேசிய பேரிடர் மீட்புப் படை எனது கருவியை வாங்கினாலும், இந்த கருவி எங்குமே பயன்படுத்தும் நிலை வராமல் இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x