

ஜெயலலிதா பெயரை துரைமுரு கன் கூறியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை யடுத்து 2 கட்சி உறுப்பினர் களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பேரவையில் அமளி நிலவியது.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடந்த விவாதம் வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின்:
ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ரூ.1,520 கோடியில் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அது தொடர்பாக ஆளுநர் உரையில் எந்த விவரமும் இல்லை.
அமைச்சர் ஜெயக்குமார்:
ஆழ் கடல் மீன்பிடிப்பு ஒருங்கிணைப்பு திட்டத்துக்கு ரூ.1,520 கோடி கேட்டு தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 3 முறை பிரதமரை சந்தித்தபோது இது தொடர்பாக வலியுறுத்தியுள் ளார். தற்போதைய முதல்வரும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கச்சத்தீவு மீட்கப்படும்
மத்திய அரசுக்கு காத்திருக் காமல் தற்போது தமிழக அரசே ரூ.1,000 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இலங்கை வசம் உள்ள 118 படகுகளை மீட்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:
ஆழ்கடல் மீன்பிடிக்கும் நிலையே கச்சத்தீவை தாரைவார்த்ததால் தான் வந்தது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதால் நமது மீனவர்களின் மீன்பிடிக்கும் எல்லை சுருங்கிவிட்டது. இது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக் கில் நல்ல தீர்ப்பு கிடைத்து, அதன்மூலம் உறுதியாக கச்சத்தீவு மீட்கப்படும்.
துரைமுருகன் (திமுக):
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது எங்கள் தலைவருக்குத் தெரியாது. முன்னாள் பிரதமர் வாஜ் பாய்க்கு ஜெயலலிதா எழு திய கடிதத்தில், கச்சத்தீவை கொடுப்பதில் எங்களுக்கு ஆட் சேபணை இல்லை என்று கூறியிருக்கிறாரே?
இதைத் தொடர்ந்து, அதிமுக வினர் எழுந்து துரைமுருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் அமைச்சர்களின் குறுக்கீடு தொடர்பாக திமுகவினர் பேசினர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:
எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது, குறுக்கிட்டுப் பேச அமைச்சர்களுக்கு உரிமை உண்டு. கடந்த 2006-11 ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா பேசும்போது 32 முறை குறுக்கிட்டு பேசியுள்ளீர்கள்.
பேரவைத் தலைவர் பி.தனபால்:
எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது தவறான தகவல்களை தந்தால் அதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். இது மரபுதான். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் யாரும் குறுக்கிட நான் அனு மதிப்பதில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கும் போதிய வாய்ப்பு அளிக்கப்படும். அதே நேரம், உறுப்பினர்கள் நான் அனு மதித்தால்தான் கேள்வி எழுப்ப முடியும்.
அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு
அப்போது எழுந்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக உறுப்பினர் துரைமுருகனைப் பார்த்து, ‘‘முன் னாள் முதல்வரின் பெயரைக் கூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது’’ என்றார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க, அதிமுக வினரும் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது.
அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக உறுப்பினர் சேகர்பாபு ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதர வாக இரு கட்சிகளின் உறுப் பினர்களும் குரல் கொடுத்ததால் அவையில் கடும் அமளி நிலவியது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர்களும் அதிமுகவினரை சமாதானம் செய்தனர். இரு தரப்பினரையும் அமரும்படி பேரவைத் தலைவர் உத்தர விட்டார். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேர அமளிக்குப் பின், பேரவைத் தலைவர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார்.
பேரவைத் தலைவர் பி.தனபால்:
உறுப்பினர்கள் அவையை நடத்த ஒத்துழைப்பு தரவேண்டும். அமைச்சர்கள், உறுப்பினர்கள் எதை கூறுவதாக இருந்தாலும் என்னைப் பார்த்துதான் பேச வேண்டும்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:
அவையில் இன்று நடந்தது போன்ற விரும்பத்தகாத சம் பவங்கள் இனி நடக்கக் கூடாது. இதை கட்டுப்படுத்தும் கடமை எங்களுக்கும், எதிர்க்கட்சியான உங்களுக்கும் உள்ளது. இனி மேலும் இதுபோன்ற சம்பவங் கள் நடந்தால் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் பி.தனபால்:
விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், ஆய்வு செய்து கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரவைத் தலைவரின் அறி விப்பைத் தொடர்ந்து, பிரச்சினை முடிவுக்கு வந்தது.