தாம்பரம் நகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: முன்னேற்றம் இல்லாத குப்பைக் கிடங்கு சீரமைப்பு

தாம்பரம் நகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: முன்னேற்றம் இல்லாத குப்பைக் கிடங்கு சீரமைப்பு
Updated on
1 min read

கன்னடபாளையம் குப்பைக் கிடங்கை சீரமைக்கும் பணி முன்னேற்றம் இன்றி இருப்ப தால், தாம்பரம் நகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பல்லாவரம் பெரிய ஏரி, செம்பாக்கம் ஏரி, கன்னடபாளை யம் ஆகிய பகுதிகளில் குப்பைகளைக் கொட்டி, மாசு ஏற்படுத்தி வருவதாக எஸ்.பி.சுரேந்திரநாத் கார்த்திக் மற்றும் இரு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தனித்தனியே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்திருந்தன.

நகராட்சிகளுக்கு உத்தரவு

பல்லாவரம், தாம்பரம் நக ராட்சி குப்பைகளை, வேங்கட மங்கலம் பகுதியில் நிறுவப்பட் டுள்ள ஒருங்கிணைந்த குப்பை யிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்வதாக அந்நகராட்சிகள் பசுமை தீர்ப்பாயத்தில் பதில் அளித்திருந்தன.

அதனைத் தொடர்ந்து, மாச டைந்த ஏரிகளை புனரமைக்கு மாறு அந்தந்த நகராட்சிகளுக்கு அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதி மணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னி லையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தொடங்கப்படாத பணி

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கள் அப்போது ஆஜராகி, பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி, பல்லாவரம் பெரிய ஏரியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. தாம்பரம் நகராட்சி, அமர் வில் தெரிவித்தவாறு, கன்னட பாளையம் குப்பை கிடங்கை அறிவியல் முறையில் சீரமைக் கும் பணி தொடங்கப்படவில்லை என்றனர்.

அதனைத் தொடர்ந்து, கன்னடபாளையம் திட்டம் முன்னேற்றமின்றி இருப்பதால், தாம்பரம் நகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் பராமரிக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நிதிக் கணக்கில் செலுத்த வேண்டும். பல்லாவரம் பெரிய ஏரி அருகில் கொட்டப்படும் குப்பைகளை வெள்ளிக்கிழமைக்குள் அகற் றப்பட வேண்டும். அது தொடர் பாக பல்லாவரம் நகராட்சி ஆணையர் அமர்வு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

மனு மீதான விசாரணை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in