

எம்.பி. ஜெகத்ரட்சகனிடம் பேசினோம். “சென்னை -பெங்களூரு இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் தொகுப்புத் தொழிற்கூட சாலையை (இண்டஸ்ட்ரியல் காரிடார்) கொண்டுவந்தேன். அரக்கோணம் ரயில் நிலையத்தில் பல ரயில்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கிராமங்களிலும் அடிப்படை வசதி மேம்பாட்டுக்காகத் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகச் செலவுசெய்துள்ளேன். மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் ரூ. 500 கோடியில் ராணிப்பேட்டை தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் விடுபட்ட அரக்கோணம் பகுதியை இணைத்துள்ளேன்” என்றார்.