

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் விரைவில் மகா கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
10-ம் தேதி பாலாலயம்
108 வைணவத் தலங்களில் ஒன்றான, புராதனம் மிக்க திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயி லில் திருப்பணிகள் மேற்கொள் ளப்பட்டு கடந்த 2005-ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், பாரத்தசாரதி கோயில் கும்பாபிஷேகம் விரை வில் நடக்க உள்ளது. இதன் தொடக்க மாக வரும் 10-ம் தேதி இக்கோயிலில் பாலாலயம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. பழமை மாறாமல் தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனைப்படி இப்பணிகள் நடக்கின்றன.
ரூ.55 லட்சம் செலவில் சுவாமி தங்க கிரீடம், கர்ண பத்திரம், ஸ்ரீஸ்ரீ சடகோபன் மற்றும் கவசங் களுக்கான தங்க திருப்பணிகளும் நடக்க உள்ளன.
இப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன், துறை ஆணையர் மா.வீரசண்முகமணி மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
யோக நரசிம்மர், வரதராஜர், திருமழிசையாழ்வார், கருடாழ் வார், குளக்கரை ஆஞ்சனேயர் சன்னதிகள் மற்றும் விமானங்களுக் கான திருப்பணிகளையும், யாக சாலை முன்னேற்பாட்டுப் பணிகளையும் ஆய்வு செய்தனர்.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.