திருச்செந்தூர் படகு விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருச்செந்தூர் படகு விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Updated on
1 min read

திருச்செந்தூர் படகு விபத்தில் பலியான 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங் கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி, திருச்சி மாவட்டங் களைச் சேர்ந்த 38 பேர் 26-ம் தேதி இரவு திருச்செந்தூர் மணப் பாடு கடல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான படகு ஒன்றில் சவாரி சென்றனர். கடலில் உயரமான அலை எழுந்ததில் படகு கவிழ்ந் தது. இதில், படகில் பயணித்த 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை அறிந்து வருத்தமுற்றேன்.

உயிரிழந்தவர்கள் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடு படவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை அனுப்பி வைத்தேன்.

இந்த விபத்தில் 11 பேர் காய மடைந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்க ளுக்கு உயர் சிகிச்சை அளிக்க மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் மீட்புப் பணிகள், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தர விட்டுள்ளேன்.

படகு விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in