

சென்னை படுவன்சேரியைச் சேர்ந்த எம்.ஹைதர் அலி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மழை, வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்டங்களில் கோடிக்கணக் கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் சேமிப்பு களை இழந்துவிட்டனர்.
வாகன கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன், தங்க நகைக் கடன் என பல்வேறு கடன்கள் வாங்கியுள் ளனர். மழை, வெள்ளப் பாதிப்பால் அனைத்தையும் இழந்து தவிக் கும் மக்கள் வங்கியில் வாங்கிய கடன்களுக்கு மாத தவணை செலுத்த முடியாமல் அவதிப் படுகின்றனர்.
எனவே, மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் வங்கிகளில் கடன் வாங்கிய வர்கள் அடுத்த ஆறு மாதங்க ளுக்கு மாதத் தவணை செலுத்து வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தவணை செலுத்தாதவர் களுக்கு வட்டி விதிக்கக்கூடாது. தவணையை உடனே செலுத்தும்படி நிர்பந்திக்கக்கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தும்படி ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் மற்றும் மத்திய, மாநில நிதித்துறை செயலர்களுக்கு உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இம்மனு ஏற்கனவே தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகி யோர் கொண்ட முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஜனவரி 4-ம் தேதி பதிலளிக்க ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர், மத்திய நிதி அமைச்சக செயலர், தமிழக நிதித்துறை முதன்மைச் செயலர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதையேற்று, விசாரணை வரும் பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.