

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் ஓய்வூதிய உதவித்தொகை திட்டங்களால் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோர் பயனடைந்து வருகின்றனர். ஆனால், கடந்த 2013-14ம் நிதியாண்டைவிட, 2016-17ல் இத்திட்டங்களால் பயனடைந் தோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும், 2013-14ல் சுமார் ரூ.4,254 கோடி செலவு செய்யப்பட்ட இத்திட்டங்களுக்கு, 2016-17ல் ரூ.3,732 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற திட்டங்களை தமிழக சமூகநலத் துறை முறையாக செயல்படுத்தாததே இதற்கு காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.