

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்காக பெங்களூரு சிறையில் இருந்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வி.என்.சுதாகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சூப்பர் டூப்பர் டிவிக்கு வெளி நாடுகளில் இருந்து மின்சாதனப் பொருட்களை வாங்கியதில் அந் நிய செலாவணி மோசடியில் ஈடு பட்டதாக வி.என்.சுதாகரன் மற்றும் டிடிவி. பாஸ்கரன் மீது அமலாக் கத்துறையினர் கடந்த 1996-ல் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை எழும் பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக் கில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற் காக பெங்களூரு சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் அடைக் கப்பட்டுள்ள வி.என்.சுதாகரன் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதே போல இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிடிவி.பாஸ்கரனும் நீதிமன்றத்தி்ல் ஆஜரானார்.
ரூ. 40 ஆயிரம் டாலர் அளவுக்கு அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பான குற்றச் சாட்டினை நீதிபதி எஸ்.மலர்மதி, அவர்களிடம் படித்துக் காண்பித் தார். அப்போது இருவரும் குற்றச் சாட்டை மறுத்தனர். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை வரும் ஜூலை 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்ட வி.என்.சுதாகரன், குற்றச்சாட்டு பதிவுக்குப் பிறகு மதியம் 1.30 மணிக்கு பெங்களூரு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற அறைக்குள் வி.என்.சுதாகரனும், பாஸ்கரனும் பேசிக் கொண்டனர். ஆனால் நீதிமன்றத் துக்கு வெளியே அவர்கள் பேசிக்கொள்ளவில்லை.