

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் சார்பில் நடமாடும் நூலகத்தை ஆட்சியர் என்.சுப்பையன் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூறியது: சரஸ்வதி மகால் நூலகத்தை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கான கூடுதல் நிதியை மத்திய, மாநில அரசுகள் வழங்கி உள்ளன. இதில், புதிய முயற்சியாக பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு சக்கர வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் நூலகம், தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக் கும் செல்லும். இதில், 600-க்கும் மேற்பட்ட தலைப்பு களில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் 10 முதல் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், வாசகர்கள் வாசிக்கவும் நூல் கள் வழங்கப்படும். சிறப்பு வாய்ந்த இந்த நடமாடும் நூலகத்தை தஞ்சை வாழ் மக்களும், தமிழக மக்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.