உடல் நலக்குறைவால் இறந்த 14 காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

உடல் நலக்குறைவால் இறந்த 14 காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் உடல் நலக்குறைவால் மரண மடைந்த 14 காவலர்களின் குடும்பத்தி னருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி காவல் நிலைய முதல்நிலை காவலர் கே.ஆவுடையப்பன், திருவாரூர் மாவட்ட ஆயுதப் படை தலைமைக் காவலர் கே.சுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலைய தலைமைக் காவலர் பாபு, சென்னை பெருநகர காவல் ஆயுதப் படை இரண்டாம் நிலை காவலர் எம்.குமார், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பி.சந்திரபாலன், தருமபுரி நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சி.வரதராசு, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.பஞ்ச மூர்த்தி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆ.ஆறுமுகம், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் ஏ.சேகர், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய தலைமைக் காவலர் ஆர்.ராஜகோபால், திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர்.ரவி, சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் கே.சிவசங்கரன், விழுப் புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி காவல் நிலைய முதல் நிலை காவலர் என்.ராஜேந்திரன், திரு நெல்வேலி நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் எல். முருகன் ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கும் முதல மைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெய லலிதா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in