Published : 23 Jun 2016 09:13 AM
Last Updated : 23 Jun 2016 09:13 AM

சர்வதேச அளவில் கணிசமாக சரிவு: தங்கம் விலை பவுனுக்கு ரூ.256 குறைவு

சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளதால், சென்னையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.256 குறைந்து ரூ.22 ஆயிரத்து 704-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், தங்கம் முதலீட்டில் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பில் சரிவு போன்ற காரணங்களால் உள்ளூரில் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது.

இந்நிலையில், சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று கணிசமாக குறைந்திருந்தது. இதனால், சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.256 குறைந்து ரூ.22 ஆயிரத்து 704க்கு விற்கப்பட்டது.

ஒரு கிராம் ரூ.2,838

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 838க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 870க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x