

தமிழக ஆளுநர் மாளிகையை பொதுமக் கள் பார்வையிடும் வசதி இதுவரை இல்லை. நிகழ்ச்சிகள் நடக்கும்போது, அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார் கள். முழுமையாக மத்திய பாதுகாப்புப் படை யினரின் கட்டுப்பாட்டில் ஆளுநர் மாளிகை உள்ளது.
தமிழக பொறுப்பு ஆளுநராக கடந்தாண்டு வித்யாசாகர் ராவ் பதவியேற்ற நிலையில், ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள மரங் களை கணக்கெடுக்கும்படி உத்தரவிட்டதுடன், அவற்றை பதிவு செய்யவும் உத்தர விட்டார். அதன்பின், பல்வேறு சீர்திருத்தங் கள் ஆளுநர் மாளிகை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்க்கும் வசதியை ஏற்படுத்த வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இதன்படி, முன் அனுமதி பெற்று பார்வையிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இந்த வசதியை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் பதிவு செய்து ஆளுநர் மாளிகையை சுற்றிப்பார்க்கலாம்.