

நுண் பார்வையாளர்களின் அறிக்கையில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந் தால், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவ டியில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் 12-ம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவின்போது, தொகுதி யில் உள்ள 256 வாக்குச் சாவடி களிலும் மத்திய அரசு பணியாளர் கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். அதற்காக 307 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான தேர்தல் பயிற்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் மாவட்ட தேர்தல் அலு வலர் தா.கார்த்திகேயன் பேசிய தாவது:
இந்தியாவின் பலமே மக்க ளாட்சிதான். அது வெளிப்படை யான தேர்தல் மூலமாக சாத்திய மாகி வருகிறது. அதனால் இந்த தேர்தலில் நுண் பார்வையாளர் களாக நீங்கள் பங்கேற்பதை நினைத்து பெருமைகொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு வந்திருப்போரில் பலர் முதல் முறையாக தேர்தல் பணிக்கு வந்தவராக இருக்கலாம். தேர்தல் பணி குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் உங்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப் படும்.
இந்த தேர்தலில் நுண் பார்வை யாளர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அதில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி யில் மறுவாக்குப் பதிவு நடத்தப் படவும் வாய்ப்புள்ளது. வாக்குச் சாவடியில் ஏதேனும் தேர்தல் விதிமீறல் காணப்பட்டால், உடனடி யாக தேர்தல் பொது பார்வை யாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சிக் கூட்டத்தில், தேர்தல் சிறப்பு பொது பார்வையாளர் மனோஜ் அகர்வால், பொதுப் பார்வையாளர் பி.ஜவகர், காவல் பார்வையாளர் ஷிவ்குமார் வர்மா, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.