உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
Updated on
1 min read

வறட்சி காரணமாக தற்கொலை செய்துகொண்ட மற்றும் அதிர்ச்சி யில் இறந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் ஓருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வறட்சியின் காரண மாக பயிர்கள் பாதிக்கப்பட்டதால், கடன்களை கட்ட முடியாமல் அதிர்ச்சி மற்றும் விஷம் அருந்தி 275-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். காவிரி விவ சாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில், இறந்த விவசாயிகளின் படத்திறப்பு மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகி யோர், படங்கள் அடங்கிய பதாகையை திறந்து வைத்து, அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது, ‘‘வறட்சியின் காரண மாக விவசாயிகள் இறந்துள்ளனர். அவர்கள் குடும்பங்களுக்கு பொது மக்கள் கைகொடுக்க வேண்டும்.என்னால் முடிந்ததை நான் செய் வேன். தற்போதும் நான் செய்து வருகிறேன்’’ என்றார்.

வணிகர் சங்க பேரமைப்பு தலை வர் விக்கிரமராஜா பேசும்போது, “விவசாயிகள் விளைவிப்பவர்கள் என்றால், நாங்கள் அதை விற்பவர் கள். இருவரும் சகோதரர்கள். இளைஞர்கள், விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டால் அதில் வணிகர்களும் பங்கேற்பார்கள். தற்போது 70 சதவீதம் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை நிறுத் தப்பட்டுவிட்டது. 30 சதவீதம் மட் டுமே உள்ளது. அவர்களுடன் சில வியாபாரிகள் 12 மாத விற்பனைக் கான ஒப்பந்தம் போட்டுள்ளதால், சட்டரீதியாக அதை எதிர்கொள்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசும்போது,‘‘ மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக் கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். உயிரிழந்த விவ சாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும். முதல் வரிடம் நான் உயிரிழந்த விவசாயி களின் விவரங்களை அளித்து இது குறித்து வலியுறுத்துவேன்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in