Last Updated : 11 Jan, 2017 09:15 AM

 

Published : 11 Jan 2017 09:15 AM
Last Updated : 11 Jan 2017 09:15 AM

தமிழக பாஜக தலைவர்களிடம் ஜெ. அண்ணன் மகள் பற்றி விசாரித்த அமித் ஷா

டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஜெய லலிதாவின் அண்ணன் மகள் தீபா குறித்தும் விசாரித்துள்ளார்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல் வமும், அதிமுக பொதுச்செய லாளராக சசிகலாவும் பொறுப் பேற்றனர். முதல்வராகவும் சசிகலா விரைவில் பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வரு கின்றன.

இதற்கிடையே, சசிகலா தலை மைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் சிலர் குரலெழுப்பி வருகின்றனர். அவர்கள், சென்னை தி.நகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டுக்கு தினமும் சென்று அவரை அரசிய லுக்கு வருமாறு அழைப்பு விடுக் கின்றனர். அவர்களிடம், விரைவில் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க இருப்பதாக தீபா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6, 7 தேதிகளில் டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற் றது. அதில் தமிழகத்தின் சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலத் தலை வர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்பு பொதுச்செய லாளர் கேசவ விநாயகம், மாநிலங் களவை உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது ஜெயலலிதா மறை வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து தமிழக நிர்வாகிகளுடன் அமித் ஷா தனியாக ஆலோசனை நடத்தியுள் ளார். இதில் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால், பொதுச் செயலாளர் பி.முரளிதர ராவ், இணை அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகி யோர் பங்கேற்றுள்ளனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து விசாரித்த அமித்ஷா, தீபா பற்றியும் அவரது வீட்டில் திரண்டு வரும் தொண்டர்கள் கூட்டம் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

அதிமுகவை எதிர்க்க வேண்டாம்

இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழகத் தில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் குறித்து மாநில தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். ஜூன் மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வரை சசிகலாவையோ, அதிமுகவையோ எதிர்க்க வேண் டாம் என அறிவுறுத்தினார்.

தேசிய செயற்குழுவின் போது ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, தீபா ஆகியோர் குறித்தும், திமுக செயல் தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் குறித்தும் அமித்ஷா விரிவாக கேட்டறிந்தார். தீபாவின் வீடு முன்பு தொண்டர்கள் குவிந்து வருவது குறித்தும், அவருக்கு உதவி செய்பவர்கள், தொண்டர்கள் மத்தியில் உள்ள ஆதரவு குறித்து கேட்டதுடன் அவரது பின்னணி, கடந்தகால செயல்பாடுகள் குறித் தும் கேட்டறிந்தார்'' என்றார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடந்த மாதம் மனு அளித்திருந்தார். இந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையை உள் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அமித்ஷாவின் ஆலோசனை யும், மத்திய அரசின் செயல்பாடு களும் அதிமுகவையும் தமிழக அரசையும் தங்கள் கட்டுக்குள் வைக்க விரும்புவதையே காட்டு வதாக கூறப்படுகிறது.

தீபாவின் வீடு முன்பு தொண்டர்கள் குவிந்து வருவது குறித்தும், அவருக்கு உதவி செய்பவர்கள், தொண்டர்கள் மத்தியில் உள்ள ஆதரவு குறித்தும் கேட்டதுடன் அவரது பின்னணி, கடந்தகால செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x