

தமிழகத்தில் மாவட்டங்கள்தோறும் மகிளா நீதிமன்றம் அமைக்க வேண்டுமென தமிழக முதல்வரிடம் நடிகை வரலட்சுமி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தரும் வகையிலும், பெண் களின் உரிமைக்காக போராடும் வகையிலும் ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை நடிகை வரலட்சுமி சமீபத்தில் தொடங்கினார்.இந்நிலை யில், அவர் தமிழக முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.
இது தொடர்பாக அவர் கூறு கையில், “முதல்வரை சந்தித்து ‘சேவ் சக்தி’ சார்பில் மனு அளித்தேன். குறிப்பாக, மாவட் டங்கள்தோறும் மகிளா நீதிமன் றங்கள் அமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.
எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து தேவையானவற்றை செய்வதாக முதல்வர் தெரிவித்தார்” என்றார்.