டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: விஏஓ தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண், தரவரிசை வெளியீடு - கலந்தாய்வு ஆக.1-ல் தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: விஏஓ தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண், தரவரிசை வெளியீடு - கலந்தாய்வு ஆக.1-ல் தொடக்கம்
Updated on
1 min read

விஏஓ தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவியில் 813 காலியிடங்களுக்காக கடந்த பிப்ரவரி 28-ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு எழுதிய 7 லட்சத்து 70 ஆயிரத்து 860 விண்ணப் பதாரர்களில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 42 பேரின் மதிப்பெண் மற்றும் தரவரிசை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியான தரவரிசை நிலை, சிறப்பு பிரிவினருக்கான தனி தரவரிசை நிலை ஆகியவையும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை குறிப்பிட்டு, மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிட் டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக் கல்வி தகுதி, இனம், சிறப்பு பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில்தான் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது, மேற்கண்ட தகவல்கள் தவறானது என தெரியவந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் தரவரிசை நிலை, காலியிட நிலை, இடஒதுக்கீட்டு விதி ஆகிய வற்றின் அடிப்படையில் கலந் தாய்வுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அழைக்கப்படுவர்.

கலந்தாய்வுக்கு அழைக்கப் படுவோர் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

விஏஓ தேர்வில் கலந்துகொண்டு, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களின் மதிப் பெண்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in