இந்தியாவில் 2017-ம் ஆண்டு முதல் வெளிப்புற கட்டமைப்பு பரிசோதனை அனைத்து கார்களுக்கும் கட்டாயம்

இந்தியாவில் 2017-ம் ஆண்டு முதல் வெளிப்புற கட்டமைப்பு பரிசோதனை அனைத்து கார்களுக்கும் கட்டாயம்
Updated on
2 min read

2017-ம் ஆண்டு முதல் கார்களின் வெளிப்புற கட்டமைப்பை பரிசோதிக்கும் மோதல் சோதனை (கிராஷ் டெஸ்ட்) கட்டாயமாக்கப் பட உள்ளது என சர்வதேச ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநர் அபிஜித் மண்டல் தெரிவித்தார்.

கன்சியூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (சிஏஐ) அமைப்பு சார்பில் இந்தியாவில் வாகன பாதுகாப்பு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அபிஜித் மண்டல் பேசியதாவது:

தற்போது இந்தியாவில் கார்களை வாங்கும்போது அதன் விலை, வடிவமைப்பு, எரிபொருள் திறன் உள்ளிட்ட அம்சங் களுக்கு முன்னுரிமை அளித்து பெரும்பாலானோர் வாங்குகின்ற னர். பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்போர் குறைவு. மேலும், தற்போது பாது காப்பு அம்சங்கள் கார்களில் கட்டாயமாக்கப்படவில்லை. எனவே, தற்போது அதிக விலை கொண்ட கார்களில் மட்டுமே ஏர் பேக்குகள் இடம்பெறுகின்றன. குறைந்த விலை கொண்ட கார்க ளிலும் குறைந்தபட்சம் முன் இருக்கையில் அமரும் 2 பேருக் காவது ஏர் பேக் வசதி அளிக்கப் படுவதை கட்டாயமாக்க வேண்டும். ஒரு சில ஆயிரங்களை மிச்சப்படுத்தி உயிரை பறிகொடுத்து விடக் கூடாது.

உலகில் பிற நாடுகளில் கார்களை அதிவேகமாக ஏதாவது ஒன்றின் மீது மோதவிட்டு, அதன் வெளிப்புற அமைப்பை பரி சோதிக்கும் கிராஷ் டெஸ்ட் மேற் கொள்ளப்படுகிறது. அதேபோல தற்போது இந்தியாவில் தயாரிக்கப் படும் கார்களுக்கும் அடிப்படை பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. ஆனால், அவை முழுமை யானதாக இல்லை.

எனவே, வரும் 2017-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தயாரிக்கப் படும் அனைத்து வகையான கார் களுக்கும் கிராஷ் டெஸ்ட் கட்டாய மாக்கப்பட உள்ளது. இதன் மூலம், கார்களின் பாதுகாப்பு ஓரளவுக்கு உறுதி செய்யப்படும். இந்தச் சோதனையை செய்வதற்கான சோதனை மையங்களும் அமைக் கப்பட்டு வருகின்றன” என்றார்.

சென்னை மந்தைவெளி வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாகரன் பேசும்போது, “சென் னையில் மட்டும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,000 வாக னங்கள் புதிதாக பதிவு செய்யப் படுகின்றன.

பெற்றோர்கள் சிலர் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்களுக்கு வாகனங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். அந்த சிறுவர்கள், வாகனங்களை ஓட்டிச் சென்றால் பெற்றோருக்கும், அந்த வாகனத்தை ஓட்டும் சிறுவர் களுக்கும் அபராதம் விதிக்கப் படும். தற்போது பெரும்பாலான விபத்துகள் அதிவேகத்தாலும், தவறான வகையில் முந்திச் செல்வதாலும் ஏற்படுகின்றன. இதனை தவிர்த்தாலே பெரும் பாலான விபத்துகள் நிகழாது. மேலும், இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் நள்ளிரவு 12 மணி முதல் காலை 4 மணி வரை வாக னங்களை ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் கன்சியூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன், திட்ட இயக்குநர் சுவாதி, அர்டிமிஸ் ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் (சேவைப் பிரிவு) எம்.கிருஷ்ண குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in