

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நேற்று இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. அவர் வரும் 14-ம் தேதி கட்டாயம் இறுதி வாதத்தை தொடங்க வேண்டும் என கூறி நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
இவ்வழக்கில் கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கவேண்டிய இறுதிவாதம் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகாததால் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக் கப்பட்டது. திங்கள்கிழமையும் பவானி சிங் ஆஜராகவில்லை.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்கான சான்றிதழ்களை அவரது உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி தாக்கல் செய்தார்.
இதனிடையே திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன், “அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிற்கு வாதிட முடியாத சூழல் ஏற்பட்டால், அவருக்கு பதிலாக எங்களை வாதிட அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் சொத்துக்குவிப்பு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது” என்றார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (மார்ச் 14) நீதிபதி ஒத்திவைத்தார்.