

சென்னையில் நாளை, 17 மண்டலங்களுக்குட்பட்ட பகுதி களில் குடும்ப அட்டை குறைதீர் முகாம் நடக்கிறது.
இது தொடர்பாக உணவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
குடும்ப அட்டையில் மாற்றங் கள் செய்தல், பொதுவிநியோகத் திட்ட குறைபாடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் மாதம் தோறும் மக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
சென்னையில் 17 மண்டலங் களில், ஜூன் மாதத்துக்கான முகாம் நாளை (11-ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில், உணவு, கூட்டுறவுத்துறை உள் ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற் கின்றனர். குடும்ப அட்டைகளில் திருத்தம், பெயர், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம்.
சிதம்பரனார் மண்டலத்துக் குட்பட்டவர்கள் கொண்டித் தோப்பு, படவட்டம்மன் கோயில் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் நடக்கும் முகாமில் பங்கேற்கலாம். அதே போல், ராயபுரம் - பழைய வண் ணாரப்பேட்டை சென்னை உயர் நிலைப் பள்ளியிலும், பெரம்பூர்- வியாசர்பாடி, கணேசபுரம் சென்னை உயர்நிலைப் பள்ளியிலும், அண்ணாநகர்- வேப்பேரி சென்னை மாநகராட்சி கோட்ட அலுவலகத்திலும் முகாம் நடக்கிறது.
அம்பத்தூர்- அத்திப்பட்டு எபினேசர் மெட்ரிக் பள்ளியிலும், வில்லிவாக்கம்- கோயம்பேடு, பள்ளிக்கூடத்தெரு சென்னை மேல் நிலைப்பள்ளியிலும், திருவொற்றியூர் - விம்கோ ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளியிலும், ஆவடி - பட்டாபிராம் ஆவடி நகராட்சி தொடக்கப்பள்ளியிலும், ஆர்.கே.நகர்- கொருக்குப் பேட்டை ஓ.எல்.கே சென்னை தொடக்கப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது.
தி.நகர்- மேற்குமாம்பலம், சென்னை தொடக்கப்பள்ளியிலும், மயிலாப்பூர்- பி.எஸ்.மேனிலைப் பள்ளியிலும், பரங்கிமலை- ஆலந்தூர் நிதி மேல்நிலைப் பள்ளியிலும், தாம்பரம்- திருவஞ்சேரி, கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், சைதாப்பேட்டை-மேட்டுப்பாளை யம் சென்னை நடுநிலைப்பள்ளி யிலும், ஆயிரம்விளக்கு- தேனாம்பேட்டை சென்னை மாநகராட்சி சமூக நலக்கூடம், சேப்பாக்கம்- லாயிட்ஸ் காலனி மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், சோழிங்கநல்லூர்- துரைப்பாக்கம் கவுன்சிலர் அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.