Published : 02 Jul 2015 08:09 AM
Last Updated : 02 Jul 2015 08:09 AM

ஹெல்மெட்: சென்னையில் வரவேற்பும்.. பாதிப்பும்..

இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஜூலை 1 (நேற்று) முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அரசு அறிவித்திருந்தது. இதனால் சென்னையில் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணிந்து சென்றனர்.

தலைக்கேற்ற கவசம்

இரு சக்கர வாகனத்தில் கணவன், மனைவி, குழந்தை என 3 பேர் செல் லும் காட்சியை பரவலாக பார்க்க முடியும். இரு சக்கர வாகனம் ஓட்டுபவரும் உடன் பயணிப்போரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என் பது கட்டாயமாகிவிட்டது. வாகனம் ஓட்டுபவர், அவரது மனைவி, குழந்தை என மூவரும் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு வண்டியில் பய ணிப்பது ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு போகும் நெருக்கடியான பயணமாக உள்ளது.

மேலும், கடைகளில் விற்கப்படும் அனைத்து ஹெல்மெட்களும் பெரிய வர்கள் உபயோகிக்கும் அளவுகளில் மட்டுமே கிடைக்கின்றன. குழந்தை களுக்கு சிறிய ஹெல்மெட் கிடைப்பதில்லை. இதனால், குழந்தை களுக்கு ஹெல்மெட் வாங்க செல்லும் பெற்றோர் ஏமாற்றத்தோடு திரும்பும் நிலையே தொடர்கிறது.

‘மேக்-அப்’ கலைகிறது

மத்திய அரசு அதிகாரியான என்.ஆனந்தி கூறும்போது, ‘‘கடந்த 10 ஆண்டுகளாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வருகிறேன். வண்டி வாங்கியதில் இருந்து ஹெல்மெட் அணிந்தே செல்கிறேன். பெண்கள் அணியும் ஹெல்மெட், ஆண்கள் அணியும் ஹெல்மெட் போலவே அதிக எடை கொண்டதாக இருப்பதால் கழுத்து வலி ஏற்படுகிறது.

மேலும், காதில் பெரிய கம்மல், ஜிமிக்கி அணிய முடிவதில்லை. பூச்சூட முடிவதில்லை. ஹெல்மெட் அணிந்தால் மேக்-அப் கலைந்துவிடு கிறது. ஒவ்வொரு முறையும் ஹெல்மெட்டை கழற்றியதும் தலைவார வேண்டியுள்ளது. இது பெண்களுக்கு சிரமமான காரியம்.

ஹோட்டல் வரவேற்பாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணிக்கு செல்லும்போது கொண்டை போட்டு செல்வார்கள். அவர்களுக்கு ஹெல்மெட் அணிவது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது. எனவே, பெண்களுக்கு குறைந்த எடையுள்ள, வசதியான ஹெல்மெட் களை தயாரித்து விற்க வேண்டும்’’ என்றார்.

‘லிப்ட்’-க்கு சிக்கல்

ஹெல்மெட் கட்டாயத்தை தீவிர மாக அமல்படுத்தியிருப்பதால் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் நண்பர்களுக்கும், முதியோருக்கும் ‘லிப்ட்’ கொடுப்பதற்கு அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அண்ணா சிலை சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தின் பின்னால் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த சதீஷ் கூறும்போது, “சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து வந்தேன். எல்ஐசி வரை செல்ல வேண்டியிருந்ததால் அவ்வழியாக வந்தவரிடம் லிப்ட் கேட்டு ஏறினேன். என்னிடம் பைக் இல்லாததால் ஹெல் மெட் வாங்கவில்லை. பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல் மெட் அணிய வேண்டும், இல்லா விட்டால், வண்டி ஆவணங்கள் பறி முதல் செய்யப்படும் என்ற உத்தரவு ஏற்புடையதாக இல்லை. இது, இரு சக்கர வாகனங்களில் செல்பவர் கள் மனிதாபிமானத்துடன் மற்றவர் களுக்கு உதவும் நோக்கத் துக்கு அச்சுறுத்தலாக இருக்கும்” என்றார்.

பாதுகாக்க முடிவதில்லை

பெரம்பூரை சேர்ந்த அசோக் கூறும்போது, ‘‘எனக்கும், மனைவிக்கு மான இரு ஹெல் மெட்களை பாதுகாக்க 2 செயின் லாக்குகளை வாங்கினேன். இரண்டையும் வைத் தால் வண்டியின் இரு பக்கமும் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் நெருக்கடியான இடங்களில் வண்டியை நிறுத்த முடியவில்லை. மேலும் மழை பெய்தால் ஹெல்மெட் உள்பகுதி நனைந்து வீணாகிவிடுகிறது’’ என்றார்.

கோயம்பேடு செந்தில், ‘‘மனை வியை அவரது அலுவலகத்தில் விட்டு விட்டு, பிறகு எனது அலுவலகத்துக்கு செல்கிறேன். எனது ஹெல்மெட்டை வண்டி லாக்கரில் பூட்டி வைப்பேன். மனைவியின் ஹெல்மட்டை அவர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்கிறார். அங்கு அதை பாதுகாப்பாக வைக்க வசதிகள் இல்லை. பல நேரங்களில் ஹெல்மெட்டை அலுவலகத்தில் மறந்து வைத்துவிட்டு வந்துவிடுகிறார். இதனால் புதிய ஹெல்மெட் வாங்க வேண்டியிருக்கிறது’’ என்றார்.

பெரும்பாலான இருசக்கர வாக னங்களில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து செல்ல முடிவதில்லை. பின்னால் அமர்ந்திருப்பவரின் ஹெல்மெட், ஓட்டுபவரின் மீது இடிக்கிறது. அதேபோல வண்டியின் முன்பகுதியில் குழந்தைகளை அமர வைத்தால் அவர்களது தலை மீது ஹெல்மெட் இடிக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஹெல்மெட் அணிவதால் இதுபோல எண்ணற்ற பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

பள்ளி, கடைக்கு செல்லும் போதும் அணிய வேண்டுமா?

தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதை தொடர்ந்து பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கின் றனர். எனினும் ஹெல்மெட் அணிவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

அசோக் நகரில் வசிக்கும் வசந்தா கூறும்போது, “நான் காலையில் காய்கறி வாங்க பிரதான சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அப்போது கூட ஹெல்மெட் அணிய வேண்டுமா? ஹெல்மெட்டை கையில் வைத்துக் கொண்டே காய்கறி வாங்குவது சிரமமாக உள்ளது. ஹெல்மெட்டை வண்டியில் மாட்டி விட்டு வந்தால் யாராவது எடுத்துக்கொள் வார்களோ என்ற அச்சம் உள்ளது.

ஒரே ஒரு பொருள் மட்டும்தான் வாங்க வேண்டும் என்றால் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டே கடையில் பொருள் வாங்கலாம். மற்ற நேரங்களில் என்ன செய்வது?” என்றார்.

கோடம்பாக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் ராஜேந்திரன் கூறும்போது, “எனது பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர தினமும் மாலையில் மோட்டார் சைக்கிளில் செல்வேன். இரு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஹெல்மெட் அணிந்து செல்வது எனக்கு மட்டுமல்ல பிள்ளைகளுக்கும் சிரமமாக இருக்கும். வழியில் பிள்ளைகள் என்னிடம் பேசினால் கூட எனக்கு சரியாக கேட்காது” என்றார்.

பல கடைகளில் இருப்பு இல்லை

ஆயிரம்விளக்கு உள்ளிட்ட பகுதிகில் சில கடைகளில் மட்டுமே நேற்று ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்பட்டன. அவற்றின் விலை ரூ.1000-க்கு மேல் இருந்தது. ஹெல்மெட் கடைகளுக்கு மக்கள் வந்தவண்ணம் இருந்தனர். கடைக்காரர்களும் இருப்பு இல்லை எனக் கூறி அவர்களை திருப்பி அனுப்பினர். ஹெல்மெட் கிடைக்காததால் பலர் ஹெல்மெட் அணியாமலேயே வாகனங்களை ஓட்டினர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஹெல்மெட் விற்பனையாளர் ஒருவர் கூறும்போது, “ஏராளமான மக்கள் வந்து ஏமாந்து செல்கின்றனர்.

நாங்கள் விமானம் மூலம் ஹெல்மெட்டை கொண்டு வந்தால், அதிகம் செலவாகிறது. அந்த செலவை சேர்த்து ஹெல்மெட்டை விற்றால், விலை அதிகம் என்று மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே தற்போது டெல்லியில் ஆர்டர் கொடுத்து லாரி மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். சில தினங் களில் தட்டுப்பாடு நீங்கும்” என்றார்.

‘காக்கி சட்டை' போலீஸார் அபராதம் வசூலிக்க முடியாது

சட்டம் - ஒழுங்கு போலீஸார் சிலர் சிறிய சாலைகள், தெருக்களில் நின்றுகொண்டு ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை மிரட்டி அபராதம் வசூலிக்கின்றனர். இது முற்றிலும் தவறான நடவடிக்கை. ‘வெள்ளை சட்டை' அணிந்திருக்கும் போக்குவரத்து போலீஸாருக்கு மட்டும்தான் அபராதம் வசூலிக்கும் உரிமை உள்ளது. அவரிடம்தான் அபராதம் வசூலித்ததற்கு கொடுக்கப்படும் ரசீது புத்தகம் இருக்கும். சட்டம் - ஒழுங்கை சரிசெய்யும் காக்கி சட்டை போலீஸாருக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிடும் அதிகாரம் மட்டும்தான் இருக்கிறது. அபராதம் வசூலிக்க அதிகாரம் கிடையாது. ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை காக்கி சட்டை போலீஸார் பிடித்தாலும், அருகே இருக்கும் போக்குவரத்து போலீஸாரிடம்தான் அந்த நபரை ஒப்படைக்க வேண்டும்.

காக்கி சட்டை அணிந்திருக்கும் போலீஸார் யாராவது அபராதம் வசூலித்தால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

ஹெல்மெட் அணியாமல் வந்தனர்: சென்னையில் 1,100 பேரிடம் ஆவணங்கள், வாகனங்கள் பறிமுதல்

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,100 பேரிடம் ஆவணங்களும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண் டும் என்ற உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதைய டுத்து, சென்னையில் 300 இடங்களில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,100 பேர் பிடிபட்டனர். இவர்களில் 600 பேரிடம் வாகனங்களும், 500 பேரிடம் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘சென்னையில் இந்த ஆண்டில் இதுவரை 460 பேர் இருசக்கர வாகன விபத்தில் இறந்துள்ளனர். இதில் 227 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள். இவர்களில் 223 பேர் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2013-ம் ஆண்டில் 58,772 வழக்குகளும், 2014-ல் 51,305 வழக்குகளும், இந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி வரை 98,764 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

ஹெல்மெட்டையும் கையில் சுமக்கிறோம்

சதாசிவம் (செங்கல்பட்டு) :

சென்னையில் பணிபுரிந்து வரும் நான் செங்கல்பட்டு அருகேயுள்ள ஒரு கிராமத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மின்சார ரயிலில் சென்னை செல்வது வழக்கம். ஹெல்மெட்டை வாகன நிறுத்தத்தில் பாதுகாப்பது சிரமம் எனக் கூறிவிட்டனர். அதனால் வேலைக்குச் செல்லும்போது நான் மின்சார ரயிலில் ஹெல்மெட்டையும் தனியாக சுமந்து செல்கிறேன். என்னைப்போல் மின்சார ரயில் மற்றும் தொலைதூரப் பேருந்துகளில் செல்லும் பலர் மிகவும் சிரமப்பட்டு ஹெல்மெட்டையும் சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது.

இரவில் வண்டி ஓட்ட சிரமம்

கே.பாஸ்கர் (ஆவடி):

ஹெல்மெட் அணிந்து கொண்டு ஓட்டினால், பக்கத்தில் வரும் வாகனங்களை பார்க்க கஷ்டமாக இருக்கும். மேலும், இரவு நேரத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனத்தை ஓட்டினால், எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரிவதில்லை. இதனால், சிலர் ஹெல்மெட் கண்ணாடியை விலகி விட்டு ஓட்டினாலும், மோசமான சாலைகளால் மீண்டும் கண்ணாடி கீழே வந்து விடுகிறது. மேலும், இனி பக்கத்து தெருவுக்கு செல்ல வேண்டுமென்றாலும் ஹெல்மெட் அணிந்துதான் வாகனத்தை ஓட்ட வேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக் கிறது.

அதிக எடையால் கழுத்து வலி ஏற்படும்

அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் பி.பாலகிருஷ்ணன்:

அதிகம் எடைக் கொண்ட ஹெல்மெட்டுகளை பயன்படுத்தினால் கழுத்து வலி ஏற்படும். கழுத்து எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். அதனால் ஐஎஸ்ஐ தரம் கொண்ட மிகவும் எடைக் குறைவான ஹெல்மெட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஹெல்மெட் போடுவதால் முடி கொட்டாது. வியர்வை வெளியேறும். வியர்வையால் துர்நாற்றம் வீசும். அதனால் ஹெல்மெட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவமனைக்கு போகவில்லை

கலைவாணி (நுங்கம்பாக்கம்):

என்னுடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் விடிந்தவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து இருந்தோம். ஆனால் இன்று(நேற்று) முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதால் என்னுடைய கணவர் மட்டும்தான் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எங்களுடைய வீடு நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளதால் போக்குவரத்து காவல் துறையினர் காலையிலேயே ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்களை நிறுத்தியதை பார்க்க முடிந்தது. மருத்துவமனைக்கு செல்லும்போது இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கவே குழந்தையுடன் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு குழந்தைகளை அழைத்து செல்லும் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொண்டு பயணம் செய்யும் தாய்மார்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

பூ விற்கும் பாட்டிக்கும்..?

கல்யாணி (ஆவடி):

நான் ஆவடி பேருந்து நிறுத்தம் அருகே பூக் கடை வைத்துள்ளேன். என்னுடைய வீட்டுக்கும் பூக்கடைக்கும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம். என்னுடைய மகன்தான் தினமும் கடை வரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்வான். ஆனால் இன்று(நேற்று) ஹெல்மெட் போட வேண்டும் என்பதால் என்னை அழைத்துச் செல்லவில்லை. இந்த வயசான காலத் தில் எனக்கு ஏன் ஹெல்மெட்? என கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x